Monday, October 5, 2009

Computer velai

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்

வாங்கிட்டு
, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி
என்னதான்
வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான
ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும்
விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.

அதே
மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல

இருந்தே
செய்யணும்.

இதுக்காக
எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய

தயாரா
இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-, இங்கிலாந்து- இருக்குற Bank,

இல்ல
எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.

எனக்கு
இத செய்து கொடுங்க கேப்பாங்க.

இவங்கள
நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த
மாதிரி Client- மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க

பங்காளிக
கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம்.
இவங்க
பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".

இவங்க
போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு
கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு
கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?

அத
பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும்,
"முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA
படிக்கணும்
?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"



"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்

இருப்பாங்க
. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள

முடிச்சு
தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.

இதுல
யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு

ப்ராஜெக்ட்
கிடைக்கும்"



"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50

நாள்ல
எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்

முடிக்க
முடியாதே?"



"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க

புரிஞ்சிக்கணும்
. 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.



ஆனா
அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்

தெரியாது
, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.

இருந்தாலும்
50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver
பண்ணுவோம்
.

அத
பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,

எங்களுக்கு
இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.



"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.



"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே

"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.



"CR-னா?"



"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க

வேலை
பார்த்துட்டோம்.

இனிமேல்
எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு

சொல்லுவோம்
.

இப்படியே
50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."



அப்பாவின்
முகத்தில் லேசான பயம் தெரிந்தது.



"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"



"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர்
இருப்பாரு
. இவரது தான் பெரிய தலை.

ப்ராஜெக்ட்
சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."



"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."



"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."



"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா
குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ
எவன்
குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு
வேலை
."



"பாவம்பா"



"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.

எங்களுக்கு
எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."



"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"



"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.

நாங்க
என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை

எனக்கு
புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."



"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"



"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு

நிறைய
அடி பொடிங்க இருப்பாங்க."



"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா

வேலை
ஈஸியா முடிஞ்சிடுமே?"



"வேலை செஞ்சா தானே?

நான்
கடைசியா சொன்னேன் பாருங்க...

டெவலப்பர்
, டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.
அதுலையும்
இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட
மானம்
, மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"

சொல்லி
, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி

தமிழ்
பசங்க தான் அதிகம் இருப்பாங்க."



"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?

அவங்களுக்கு
என்னப்பா வேலை?"



"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது

இவனோட
வேலை.



புடிக்காத
மருமக கை பட்டா குத்தம்,

கால்
பட்டா குத்தம் இங்குறது மாதிரி."



"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?

புதுசா
தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.

சொன்ன
தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"



"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,

அந்தக்
குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு

இருக்கும்
. நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை

செய்துக்கலாம்னு
சொல்லுவாங்க"



"கிளையன்ட் சும்மாவா விடுவான்?



ஏன்
லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"



"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே

காலை
வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை
வார
ஆரம்பிப்போம்."



"எப்படி?"



"நீ கொடுத்த கம்ப்யூட்டர்- ஒரே தூசியா இருந்துச்சு.

அன்னைக்கு
டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,

உன்னோட
ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."

இப்படி
எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும்
சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,

இன்னும்
கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".



"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய

கழுவிட்டு
வந்துடுவீங்க அப்படித்தான?"



"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம

தான்
இருக்கணும்."



"அப்புறம்?"



"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான

ஒன்ன
பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க

கூட
முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."



"அப்புறம்?"



"அவனே பயந்து போய்,

"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்- ஒரு ஒன்னு, ரெண்டு

பேர
உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"



புது
பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு
பேரு "Maintenance and Support".

இந்த
வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு

கூட்டிட்டு
வர்றது மாதிரி.



தாலி
கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு
பராமரிக்க
வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு

புரிய
ஆரம்பிக்கும்.



"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Wednesday, December 26, 2007

IT Mother and Father



Click on the picture if you can not read this :)

Friday, August 10, 2007

Cool : Sivaji The Boss

If this doesnt work watch it from here Sivaji The Boss

Thursday, August 9, 2007

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!


ஒன்பதரை மணி காலேஜிக்கு

ஒவ்வொருத்தனா கெளம்பும் போது

ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்

ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...



அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ

அரை குறையா குளிச்சதுண்டு

பத்து நிமிஷ பந்தயத்துல

பட படன்னு சாப்டதுண்டு



பதட்டதோட சாப்பிட்டாலும்

பந்தயத்துல தோத்ததில்ல,

லேட்டா வர்ற நண்பனுக்கு

பார்சல் மட்டும் மறந்ததில்ல!



விறுவிறுன்னு நடந்து வந்து

காலேஜ் Gate நெருங்குறப்போ

'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு

ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,

வேற எதுவும் யோசிக்காம

வேகவேகமா திரும்பிடுவோம்

வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,

இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!



'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா

கடங்கார professor கழுத்தறுப்பான்...

assignment எழுதாத பாவத்துக்கு

நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!



கேலி கிண்டல் பஞ்சமில்ல,

கூத்து கும்மாள குறையுமில்ல,

எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா

H.O.Dய கூட விட்டதில்ல!



ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா

அத அடிப்பான் காபி அந்தபக்கம்...

ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து

ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!



பசியில யாரும் தவிச்சதில்ல

காரணம் - தவிக்க விட்டதில்ல...

டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்

சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!



அம்மா ஆசையா போட்ட செயினும்

மாமா முறையா போட்ட மோதிரமும்

fees கட்ட முடியாத நண்பனுக்காக

அடகு கடை படியேற அழுததில்ல ...



சட்டைய மாத்தி போட்டுக்குவோம்

சாதி சமயம் பாத்ததில்ல,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்

முகவரி என்னன்னு கேட்டதில்ல!



படிச்சாலும் படிக்கலன்னாலும்

பிரிச்சி வச்சி பாத்ததில்ல...

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்

அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!



வேல தேடி அலையுறப்போ

வேதனைய பாத்துப்புட்டோம்

'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே

மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!



ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு

ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ

மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல

கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...

பக்குவமா இத கண்டும் காணாம

நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ

'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு

சமாளிச்சி எழுந்து போவோம்...



நாட்கள் நகர,

வருஷங்கள் ஓடுது,

எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது

"Hi da machan... how are you?" வுன்னு...



தங்கச்சி கல்யாணம்,

தம்பி காலேஜி,

அக்காவோட சீமந்தம்,

அம்மாவோட ஆஸ்த்துமா,

personal loan interest,

housing loan EMI,

share market சருக்கல்,

appraisal டென்ஷன்,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம

'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு

இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,

.

.

.

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,

நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!



இ-மெயில் இருந்தாலும்

இண்டர்னெட் இருந்தாலும்

கம்பெனியில ஓசி phone இருந்தாலும்

கையில calling card இருந்தாலும்

நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க

நெனச்சாலும் முடியறதில்ல

பழையபடி வாழ்ந்து பாக்க!



அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்

'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்

'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!



கல்யாணத்துக்கு கூப்பிட்டு

வரமுடியாமா போனாலும்,

அம்மா தவறின சேதி கேட்டதும்

கூட்டமா வந்தெறங்கி,

தோள் குடுத்து தூக்கி நிறுத்தி

பால் எடுத்தவரை கூட இருந்து

சொல்லாம போக வேண்டிய இடத்துல

செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்

தேசம் கடந்து போனாலும்

பாசம் மறந்து போகாது!

பேசக் கூட மறந்தாலும்

வாசம் மாறி போகாது!

வருஷம் பல கழிஞ்சாலும்

வரவேற்பு குறையாது!

வசதி வாய்ப்பு வந்தாலும்

'மாமா' 'மச்சான்' மாறாது!

Monday, August 6, 2007

Tamil Radio

Tamil Radio URL
List of TAMIL RADIO 24 HOURS LIVE ... Kaezhungal Kazhungal Kaetukitae Irungal...
Singapore Oli 96.8 FM:
Windows Media Player - http://202.172.226.198/RadioLive/
FM968.asx Real Media Player - rtsp://202.172.226.199/fm968.rm?rpcontexturl=
http://oli.mediacorpradio.com/newradioliveoli-temp.htm&rpcontextwidth=520&rpcontextheight=80&rpurl=
http://oli.mediacorpradio.com/
Shakthi FM:
Windows Media Player - http://astream.net/live/asia/shakthi.asx
Merina Tamil Ayalosai:
Window Media Player - http://www.merina.com/asx/Merina_48.asx
Real Media Player - http://www.merina.com/Merina_48.ram
Winamp Player - http://www.merina.com/Merina_48.pls
Sangamam Radio:
Real Media Player - http://81.86.25.42:8000/listen.pls
Winamp Player - http://81.86.25.42:8000/listen.pls
Mohan's Live Radio:
Windows Media Player - http://www.mohankumars.com/html/
radio.asx
Real Media Player - http://www.mohankumars.com/html/radio.ram
Winamp Player - http://www.mohankumars.com/html/radio.m3u
Thendral World Radio:
Real Media Player - http://www.thenralworld.org/radio/live.plsWinamp Player - http://www.thenralworld.org/radio/live.pls
Express Tamil Radio:
Windows Media Player - http://extamil.com/extamil.m3u
Real Media Player - http://extamil.com/extamil.m3u
Winamp Player - http://extamil.com/extamil.m3u
Uthaya FM:
Real Media Player - http://216.127.72.106:8128/listen.pls
Winamp Player - http://216.127.72.106:8128/listen.pls
Vulaa Live Radio from USA:
Real Media Player - http://69.76.49.67:2410/listen.pls
International Tamil Radio:
Windows Media Player - http://medianet.homeftp.net:82/audio/live/static/radiolivebb.asx
Real Media Player - http://medianet.homeftp.net:82/audio/live/static/radiolivebb.ram
Winamp Player - http://medianet.homeftp.net:82/audio/live/static/radiolive.pls
Oli FM - Multi Ingulal Indian Radio Station:
Real Media Player - http://64.62.175.226:8280/listen.pls
Winamp Player - http://64.62.175.226:8280/listen.pls
First Tamil Radio from UK:
Real Media Player: http://81.152.91.173:8000/listen.pls
Winamp Player: http://81.152.91.173:8000/listen.pls
Love Tamil Radio:
Real Media Player - http://65.94.232.235:8000/listen.pls
Winamp Player - http://65.94.232.235:8000/listen.pls
TI FM Radio:
Real Media Player - http://tamilinside.no-ip.com:8000/listen.pls
Winamp Player - http://tamilinside.no-ip.com:8000/listen.pls
Canadian Tamil Radio:
Windows Media Player - http://www.ctr24.com/23live.html
Thenisai Tamil Radio:
Real Media Player - http://www.thenisai.com/thenisai.ram
Winamp Player - http://www.thenisai.com
AR Rahman Hitz:
Windows Media Player - http://tamilonlineradio.com/arrradio.asx
Illayaraaja Hitz:
Windows Media Player - http://tamilonlineradio.com/rajaradio.asx
Pudhu Malar Radio:
Windows Media Player - http://tamilonlineradio.com/newhits.asx
Gramathu Padalgal:
Windows Media Player - http://tamilonlineradio.com/GramiyaPadalgal.asx
Tamil Online Radio:
Windows Media Player - http://tamilonlineradio.com/Tamilonlineradio.asx
Pazhaiya Padalgal:
Windows Media Player - http://tamilonlineradio.com/oldhits.asx

Friday, August 3, 2007

மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்

Subject: இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.செருப்பு இல்லாம நாம நடக்கலாம்ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா? - ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம் -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!! ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 31க்கும்,
ஜனவரி 1க்கும்ஒரு நாள்தான் வித்தியாசம்.ஆனால்,ஜனவரி 1க்கும்,டிசம்பர் 31க்கும்,ஒரு வருசம் வித்தியாசம்.இதுதான் உலகம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா? --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா? ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இளநீர்லயும் தண்ணி இருக்கு,பூமிலயும் தண்ணி இருக்கு.அதுக்காக,இளநீர்ல போர் போடவும் முடியாது,பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா? ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,Rewindலாம் பண்ண முடியாது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------